நயன்தாராவின் மண்ணாங்கட்டி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள இறைவன் திரைப்படம் வருகிற செப்.28 ஆம் தேதி வெளியாகிறது.
நயன்தாரா முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோலமாவு கோகிலா படத்துக்கு பிறகு யோகிபாபு இப்படத்தில் நடிக்கிறார்.
இப்படத்துக்கு மண்ணாங்கட்டி எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரபல யூடியூப் சேனலில் புகழ்பெற்ற டூட் விக்கி இப்படத்தை எழுதி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதையும் படிக்க: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை: டி.ஆர். பாலு பேச்சு
இந்த நிலையில், மண்ணாங்கட்டி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.