செய்திகள்

லியோ ஓடிடி தேதி இதுதானா?

27th Oct 2023 03:53 PM

ADVERTISEMENT

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம்  உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியானது. 

இதுவரை வெளியான தமிழ்ப்படங்களிலேயே அதி வேகமான வசூல் லியோதான் என்கிற அளவிற்கு உலகம் முழுவதும் இப்படம் வருவாயை ஈட்டி வருகிறது.

இதையும் படிக்க: எப்படிடா இருக்க..? யாரைச் சொன்னார் விஜய்?

ADVERTISEMENT

இப்படம் 7 நாள்களில் ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ  அறிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிகமான வசூலித்த படங்களில் லியோ முதலிடத்தில் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: லலித் குமாருக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள்?

ADVERTISEMENT
ADVERTISEMENT