பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், ‘சித்தா’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார்.
குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உருவாகியுள்ள ‘சித்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையும் படிக்க | ரஜினி - 170 படத்தில் ராணா டகுபதி!
இந்நிலையில், செப்.28 ஆம் தேதி வெளியான இப்படம் 4 நாள்களில் உலகளவில் ரூ.11.5 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சித்தா திரைப்படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.