செய்திகள்

பிளாட் முழுவதும் புடவைகள் வைத்திருக்கும் பிரபல சின்னத்திரை நடிகை

3rd Oct 2023 11:29 PM

ADVERTISEMENT

பிளாட் முழுவதும் புடவைகள் வைத்திருப்பதாக கூறி நிகழ்ச்சி தொகுப்பாளரையே பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா வியப்பில் ஆழ்த்தினார். 

சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் தினேஷ்  மீது ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதில் கடந்த 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

அதன்பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்னும் விவாகரத்து பெறவில்லை. ரச்சிதா அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் தன்னிடைம் 5 ஆயிரம் புடவைகள் இருப்பதாகவும், பெங்களூருவில் உள்ள பிளாட் முழுவதும் புடவைகளை வைத்திருப்பதாகவும் கூறி நிகழ்ச்சி தொகுப்பாளரையே ஆச்சர்யப்பட வைத்தார். 

ADVERTISEMENT

அதேசமயம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு பிரபல சின்னத்திரை நடிகையும் எதிர்நீச்சல் தொடரில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவருமான பிரியதர்ஷினி, தன்னிடம் கட்டாத புடவையே ஆயிரத்துக்கும் மேடற்பட்ட புடவைகள் இருப்பதாக தெரிவித்தார்.  

இருவர் கூறிய தகவலை கேட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT