செய்திகள்

மெரி கிறிஸ்துமஸ் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

3rd Oct 2023 12:30 PM

ADVERTISEMENT

 

'அந்தாதுன்' பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. 'அந்தாதுன்' படம் பெரும் வெற்றி பெற்றதால் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ராதிகா சரத் குமார், சஞ்சய் கபூர், தினு ஆன்ந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இதையும் படிக்க | சித்தா வசூல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்தது. ஆனால் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனது.

ADVERTISEMENT

தொடர்ந்து, ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வருகின்ற டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், முன்கூட்டியே டிச.8 ஆம் தேதி வெளியிடுவதாக மீண்டும் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு மாற்றியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT