நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சித்தா வசூல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி இதுவரை உலகளவில் ரூ.90 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மார்க் ஆண்டனி ரூ.100 கோடியை வசூலித்துவிட்டதா? என ரசிகர் ஒருவர எக்ஸ் தளத்தில் கேள்வியெழுப்பினார். இதைக் கண்ட தயாரிப்பாளர் வினோத் ’இன்னும் சில நாள்களில்..’ என பதிலளித்துள்ளார்.