எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடிப்பது யார் என்பது இறுதியாகியுள்ளது. புதிய ஆதி குணசேகரன் அறிமுக காட்சிகள் எதிர்நீச்சல் முன்னோட்ட (ப்ரோமோ) விடியோவாக வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குடும்பப் பெண்களை மட்டுமின்றி அனைத்து வயது ரசிகர்களையும் எதிர்நீச்சல் தொடர் கவர்ந்துள்ளது.
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் முக்கியமான பாத்திரம். கேலி மற்றும் நக்கல் நிறைந்த வில்லத்தன செய்யும் பாத்த்திரமாக இருப்பதால், ஆதி குணசேகரன் பாத்திரம் பலரைக் கவர்ந்துள்ளது.
இந்த பாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து மாரடைப்பால் கடந்த மாதம் காலமானார். இதனைத் தொடர்ந்து ஆதி குணசேகரனாக நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது.
படிக்க | எதிர்நீச்சல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்! பிக் பாஸ் -7 காரணமா?
இந்த பாத்திரத்தில் நடிகர் இளவரசு நடிக்கிறார். வேல ராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பூவிலங்கு மோகன் நடிப்பார் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடிக்கவுள்ள நபர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆதி குணசேகரன் பாத்திரத்தை நீண்ட நாள்களுக்குப் பிறகு மக்களிடம் காட்டுவதற்கான எதிர்நீச்சல் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
ஆதி குணசேகரன் வெள்ளை வேட்டி சட்டையுடன் அதே கம்பீரத்துடன் காரிலிருந்து இறங்கி தன் வீட்டுக்குள் வருகிறார். ஆனால், அவரின் முகத்தை முன்னோட்ட விடியோவில் காட்டவில்லை. இதனால் எதிர்நீச்சல் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படிக்க | சீரியல் வில்லனுக்கு இவ்வளவு எதிர்பார்ப்பா? எதிர்நீச்சலின் மற்றொரு மைல்கல்!!
எனினிம், முன்னோட்ட விடியோவின் சில காட்சிகளை வைத்துப் பார்க்கும்போது, ஆதி குணசேகரனாக நடிப்பவர் வேல ராமமூர்த்தி என்பது உறுதியாகியுள்ளது.
ஆதி குணசேகரன் பாத்திரத்திற்கு வலு சேர்ப்பாரா வேல ராமமூர்த்தி என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.