பிக் பாஸ் சீசன் 7 போட்டியில் அறிமுகமாகியுள்ள பல்வேறு புதிய விதிமுறைகள் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை (அக். 1) கோலாகலமாகத் தொடங்கிவுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த சீசன்களில் முதல் வாரம் முழுவதும் பாசம், அன்பு, நட்பு உள்ளிட்டவைக்கு பஞ்சமில்லாமல், மிகவும் அமைதியாகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு இருக்கும்.
ஆனால், இந்த முறை முதல் நாளே ஒவ்வொரு போட்டியாளர்கள் நுழையும்போது கேப்டன் டாஸ்க் வழங்கப்பட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தினர்.
இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்ற நடனக் கலைஞர் விஜய் வர்மா முதல் வார கேப்டனானார்.
இரண்டு வீடுகள்
இந்த சீசனில் முதல் முறையாக ஸ்மால் பாஸ் வீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ள கேப்டனை கவராத 6 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
ஸ்மால் பாஸ் வீட்டில்தான் சமையல் அறை உள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் உணவுகளை ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சமைத்து கொடுக்க வேண்டும். பிக் பாஸ் வீட்டு பணிகளை ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள்தான் செய்ய வேண்டும்.
இதையும் படிக்க | மூன்றில் ஒரு பகுதியினர் ஏழைகள்: குஜராத்தில் அதிகரிக்கும் வறுமை
பிக் பாஸ் கூறும்வரை ஒரு வாரத்திற்கு ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வரக் கூடாது.
இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்ற போட்டியாளர்கள் பவா செல்லதுரை, ரவீனா தாஹா, வினுஷா தேவி, ஐஷு, அனன்யா, நிக்ஸன்.
இரண்டு குரல்கள்
ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் பிக் பாஸ் பேசமாட்டார். ஸ்மால் பாஸ் என்ற புதிய குரல் இந்த சீசனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவர்தான் ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் பேசுவார்.
இரண்டு நாமினேஷன்கள்
வழக்கமாக வீட்டில் உள்ள ஏதேனும் இரண்டு போட்டியாளர்களை நாமினேஷன் செய்வார்கள். ஆனால், இந்த முறை பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஸ்மால் பாஸ் போட்டியாளர்களையும், ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பிக் பாஸ் போட்டியாளர்களை மட்டுமே நாமினேஷன் செய்ய முடியும்.
இதுபோன்ற பல்வேறு சுவாரஸ்யமான விதிமுறைகளால் போட்டியாளர்கள் செய்வதறியாது கலங்கினாலும், காணும் பார்வையாளர்களுக்கு இந்த முறை டபுள் கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.