செய்திகள்

ரஜினி - 170 படத்தில் இணைந்தார் அமிதாப் பச்சன்!

3rd Oct 2023 06:07 PM

ADVERTISEMENT


ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். இந்த படத்திற்கும் அனிருத்துதான் இசை. படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. படப்பிடிப்பு வரும் 4 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்காக செட் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்க உள்ளனர். அது முடிந்ததும் படத்தின் மற்ற படப்பிடிப்பை கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

இதையும் படிக்க: ஸ்ரீதேவி மரணத்திற்கு இதுதான் காரணமா? மனம் திறந்த போனி கபூர்!

படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியான நிலையில் படத்தில் நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், நடிகர்கள் ராணா டகுபதி, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிக்க உள்ளதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது

ADVERTISEMENT

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT