செய்திகள்

ஆமிர் கானின் புதிய படம் அறிவிப்பு! 

3rd Oct 2023 08:44 PM

ADVERTISEMENT

 

ஆமிர் கானின்  நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட இருப்பதால் இனி சில ஆண்டுகளுக்கு நடிக்க போவதில்லை என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஆமிர்கான் தனது தயாரிப்பு நிறுவனமான ஏகேபி (ஆமிர் கான் புரடக்‌ஷன்ஸ்) தயாரிப்பில் ‘லாகூர், 1947’ என்ற தலைப்பில் புதிய படத்தினை தயாரிக்கிறார் ஆமிர் கான். இந்தப் படத்தில் ஆமிர் கான் நடிக்கவில்லை. பிரபல ஹிந்தி நடிகர் சன்னி தியோல் நடிக்க ராஜ்குமார் சந்தோஷி இயக்குகிறார். 

இதையும் படிக்க: நட்பே துணை: விராட் கோலியின் பேட்டினால் சதம் விளாசிய ஸ்மித்!     

ADVERTISEMENT

அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியுள்ள ரன்பீர் நடித்துள்ள அனிமல் படத்திலும் சன்னி தியோல் வில்லனாக கலக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க: ரத்தம் படத்தின் ரத்தம் தெறிக்கும் 5 நிமிட முன்னோட்ட விடியோ! 

இந்த அறிவிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமீர்கான், “நான் மற்றும் ஏகேபி எங்களது அடுத்த படத்தினை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரும் ஆழ்ந்த நடிப்புத் திறமையும் கொண்ட சன்னி தியோலுடன் இணைவதில் மகிழ்ச்சி. தரமான படத்தினை அளிக்க இந்தக் கூடணியின் பயணம் தொடங்கியுள்ளது. உங்களது ஆசிர்வாதங்களை வேண்டுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT