செய்திகள்

வெளியானது சிவராஜ்குமாரின் கோஸ்ட் பட டிரைலர்

1st Oct 2023 04:05 PM

ADVERTISEMENT

சிவராஜ்குமார் நடித்துள்ள ‘கோஸ்ட்’  படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. 

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ‘கோஸ்ட்’ என்கிற படத்தில் நடித்து வருகிறது. படத்தில் ஜெயராம், அனுபம் கேர், பிரசாந்த் நாராயணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீனி இயக்கி வருகிறார்.

படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். படத்தினை சந்தோஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.

சிவராஜ்குமார். இந்திய சினிமாவில் ஒரு தனித்துவமான படமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். படம் விஜய் படமான லியோ வெளியாகும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் படத்தின் டிரைலரை எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT