சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி(நடராஜ்) நடிக்கின்றனர்.
படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
முன்னதாக, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டிருந்தனர். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த டீசர் இதுவரை யூடியூப்பில் 3.5 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.
சமீபத்தில் கங்குவாவின் இறுதிக்கட்ட படப்படிப்பு தாய்லாந்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், சில காட்சிகளை மட்டும் எடுக்க வேண்டும் என்பதால் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதையும் படிக்க: நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?: ஆவேசமாக பேசிய மன்சூர் அலிகான்
மேலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் விஎஃப்எக்ஸ் பணிகளையே நம்பி உள்ளதால் அதற்கான குழு கடுமையாக உழைத்து வருகிறது. தமிழில் இதுவரை வெளியான படங்களிலேயே சிறப்பான விஎஃப்எக்ஸ் தரம் கொண்ட படமாக இது இருக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்களாம்.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நேர்காணல் ஒன்றில் கங்குவா திரைப்படத்தை உலக முழுவதும் 38 மொழிகளில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.