கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவ.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கேங்க்ஸ்டர் சீசரும் (ராகவா லாரன்ஸ்) இயக்குநராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் கிருபாவும் (எஸ்.ஜே.சூர்யா) எதிர்கொள்ளும் பிரச்னைகளாக உருவாகியிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
இதையும் படிக்க: விஷத்தை கக்குவதற்காகவே சமூக வலைதளத்துக்கு வருகிறார்கள்: மணிரத்னம் பாய்ச்சல்!
படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், ஜப்பான் படத்தின் கடும் தோல்வியால் இப்படத்தின் முதல்நாள் வசூலை விட அடுத்தடுத்த நாள்களின் வசூல் அதிகரித்தன.
இதையும் படிக்க: ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?
இப்படம் வரவேற்பைப் பெற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மேலும் 100 திரைகளில் படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்படம் வெளியான 10 நாள்களில் உலகளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் எந்தப் பெரிய படங்களும் இல்லாததால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.