செய்திகள்

சித்தா ஓடிடி தேதி!

21st Nov 2023 03:22 PM

ADVERTISEMENT

 

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த்,  நிமிஷா சஜயன் நடிப்பில் ‘சித்தா’ படம் வெளியானது. 

குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உருவாகியுள்ள ‘சித்தா’ திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. 

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.30 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | குட் நைட் இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?

சித்தா திரைப்படத்தின் வரவேற்பைக் கண்ட ஓடிடி தளங்கள் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற போட்டிபோட்டன. முடிவில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்கு சித்தா படத்தை வாங்கியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. 

View this post on Instagram

A post shared by Disney+ Hotstar Tamil (@disneyplushotstartamil)

இந்நிலையில், இப்படம் ஓடிடியில் நவ.28 ஆம் தேதி வெளியாக உள்ளதாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT