செய்திகள்

புதிய படத்தில் இசையமைப்பாளராகிறார் மிஷ்கின்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

31st May 2023 07:09 PM

ADVERTISEMENT


விரைவில் வெளியாகவுள்ள புதிய படத்தில் இசையமைப்பாளராக இயக்குநர் மிஷ்கின் அறிமுகமாகவுள்ளார். சமீப காலமாக இசை பயின்று வந்த அவர், தற்போது முழுநீள படத்துக்கு இசையமைக்கிறார். 

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி கதைகளை படங்களாக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின். இவரின் படங்களில் இசைக்கு முக்கியத்துவம் அளித்து காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கம். 

இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக்கொண்டார். அவ்வபோது மேடைகளில் இளையராஜா பாடல்களைப் பாடுவதுடன், பாடகர்களுக்கான சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்குபெற்றார். 

இந்நிலையில், இயக்குநர் ஆதித்யா இயக்கவுள்ள டெவில் படத்தில் இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள டெவில் பட போஸ்டரில், இசையமைப்பாளர் மிஷ்கின் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT