செய்திகள்

விஜய் டிவியில் மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கும் டிடி!

31st May 2023 06:06 PM

ADVERTISEMENT

விஜய் டிவியில் மீண்டும் தொகுப்பாளினியாக திவ்ய தர்ஷினி(டிடி) களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ஜேவாக இருந்து பிறகு விஜேவாக மாறி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் திவ்ய தர்ஷினி. இவர் 20 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் விஜேவாக பணியாற்றி வரிகிறார். காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் பிரபலமானார்.

இவர் முன்னணி நடிகர்களின் இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

முன்னதாக, எங்கிட்ட மோததே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியை திவ்ய தர்ஷினி(டிடி) தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: டிசிஎஸ் நிறுவனத்துக்கு புதிய சிஇஓ நியமனம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT