செய்திகள்

வெளியானது ரெஜினா டீசர்! 

30th May 2023 06:34 PM

ADVERTISEMENT

 

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் 2022, டிச.22இல் வெளியாகியது. கலவையான விமர்சனங்கள் வந்தது. 

இதையும் படிக்க: விஜய் படத்துடன் மோதும் தனுஷ்? 

தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி! 

நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்துள்ள படம்தான் ரெஜினா. இதில் நிவாஸ் ஆதித்தன், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

சதிஷ் நாயர் தயாரித்துள்ள இந்தப் படத்தினை இயக்குகிறார் டோமின் டி செல்வா. யுகபராதி எழுதிய ‘சூராவளிப் போல’ எனும் இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். தயாரிப்பாளரான சதிஷ் நாயர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியப் படமாக ரிலீஸாக உள்ளது.

 

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாக உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT