செய்திகள்

மல்யுத்த வீரர்களுக்கு ரித்திகா சிங் ஆதரவு!

30th May 2023 09:51 PM

ADVERTISEMENT

 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு புகாா் மீது கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையும் படிக்க:  சிவகார்த்திகேயனுக்கு நான்தான் வில்லன்: மிஷ்கின் அதிரடி! 

கடந்த 28ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது, நாடாளுமன்ற திறப்பு விழாவுக்காக குவிக்கப்பட்டிருந்த காவலர்கள், வீரர், வீராங்கனைகளை குண்டுக்கட்டாக கைது செய்து அழைத்துச்சென்றனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி! 

தற்போது சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசவுள்ளதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநில ஹரித்வாரிலுள்ள கங்கை ஆற்றங்கரைக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பலர் அப்பகுதியில் குவிந்ததால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் விவசாய சங்கத் தலைவர்கள் சமாதானம் செய்தனர்.

இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இறுதிச் சுற்றில் மல்யுத்த வீராங்கனையாக நடித்திருப்பார். தனது ட்விட்டர் பக்கத்தில் ரித்திகா சிங், “இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் அசிங்கமாக இருக்கிறது. அவர்கள் மனநிலையை நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒட்டுமொத்த உலகத்திற்கு முன்பாக அவர்களுக்கு சுயமரியாதையும்   மறுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டிற்காக விளையாடியவர்களுக்காக நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவின் பின் நிற்பதுபோல நாம் அவர்கள்பின் நிற்க வேண்டும். இதை விரைவில் தீர்பார்களென நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே சேவாக், இர்பான் பதான், அனில் கும்ப்ளே ஆகிய வீரர்கள் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT