செய்திகள்

ஆரவாரம் செய்த ரசிகர்களால் கோபித்துக் கொண்டு சென்ற நடிகர் ஆர்யா!

30th May 2023 10:39 AM

ADVERTISEMENT

ஆரவாரம் செய்த ரசிகர்களால்  நடிகர் ஆர்யா  கோபித்துக் கொண்டு சென்ற சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இத்னானி நடிக்கும் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் ஜூன் 2ம் தேதி திரைக்கு வர உள்ளது. 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நடிகர் ஆர்யா, காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் விளம்பரத்தை வெளியிட்டு ரசிகர்களை சந்தித்து வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக  சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இத்னானி  ஆகியோர் வருவதாக தகவல் தெரிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த வணிக வளாகத்தில் குவிந்தனர். 

ADVERTISEMENT

தொடர்ந்து வந்த நடிகர் ஆர்யா, மேடையின் மீது ஏறி திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டார்.

 தொடர்ந்து,  ரசிகர்களிடையே பேசிக் கொண்டிருந்தார் அப்பொழுது ஏராளமான ரசிகர்கள் அவருடன் சுயபடம் எடுக்க முற்பட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

அங்கு வைக்கப்பட்டிருந்த விளக்குகளும் ரசிகர்கள் மீது சரிந்து விழுந்தது. பாதுகாவலர்களை தாண்டி மேடையில் ஏறிய ரசிகர்களால் கோபமடைந்த நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இத்னானி உடனடியாக மேடை விட்டு இறங்கி சென்றனர்.

இதையும் படிக்க: ஜம்முவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் பலி; 30 பேர் காயம்

இதை அறியாத ரசிகர்கள் மீண்டும் ஆர்யா வருவார் என்று சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனை அடுத்து அனைவரும் அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT