பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ். க்ரித்தி சனோன் சீதையாக நடித்துள்ளார்.
இதையும் படிக்க: எனது மனைவியின் சிறந்த திரைப்படம் இதுதான்: அபிஷேக் பச்சன் அதிரடி கருத்து!
ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. பலரும் இதன் சிஜி காட்சிகளை விமர்சித்தனர். எனவே, படத்தின் சில காட்சிகள் மீண்டும் படப்பிடிப்பு செய்து கிராபிக்ஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து, 2023 ஜூன் 16 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: நம்ம தாசில்தார் சத்யாவா இது?: வாணி போஜனின் சுற்றுலா புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்!
தெலுங்கு திரையரங்க உரிமைக்காக ரூ.170 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாஸின் முந்தைய படங்களை விடவும் இதுதான் அதிகம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று வெளியான ராம் சீதா ராம் பாடல் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.