செய்திகள்

திரைத்துறையில் 8 ஆண்டுகள் நிறைவு செய்த சாய் பல்லவி ! 

29th May 2023 07:56 PM

ADVERTISEMENT

 

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் படத்திற்கு கிடைத்த வெற்றியினால் தென்னிந்தியா  முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.  நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

2022இல் சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் விமர்சன ரீதியாக பெறும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் வெளியான விராட பருவம் திரைப்படமும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார். 

ADVERTISEMENT

இன்றுடன் பிரேமம் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான இந்த மலையாளப் படம் தமிழில் மிகுந்த வரவேற்பினை பெற்றது. காரணம் சாய் பல்லவி. தமிழ் பேசும் ஆசிரியையாக மிகவும் இயல்பாக நடித்திருந்தார். இன்றும் மலர் டீச்சர் என ரசிகர்கள் உருகுகிறார்கள். 

ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சாய் பல்லவிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT