செய்திகள்

ராம் சீதா ராம்: வெளியானது ஆதிபுருஷ் பட பாடல்! 

29th May 2023 03:13 PM

ADVERTISEMENT

 

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம்  ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ். க்ரித்தி சனோன் சீதாவாக நடித்துள்ளார். 

இதையும் படிக்க: சுனைனாவின் ரெஜினா படம் குறித்த அப்டேட்! 

ADVERTISEMENT

ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஆதிபுருஷ் படம் 2023, ஜனவரி 12-ல் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பலரும் இதன் சிஜி காட்சிகளை விமர்சித்தனர். எனெவே, படத்தின் சில காட்சிகள் மீண்டும் படப்பிடிப்பு செய்து கிராபிக்ஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து, 2023 ஜூன் 16 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: நம்ம தாசில்தார் சத்யாவா இது?: வாணி போஜனின் சுற்றுலா புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்!

சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ராம் சீதா ராம் எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் பாடலை ஜி.முரளிதரன் எழுதியுள்ளார். சசேட் பரம்பரா இசையமைத்துள்ளார். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT