செய்திகள்

அஞ்சலியின் 50வது படம் குறித்த அப்டேட்! 

28th May 2023 04:03 PM

ADVERTISEMENT

 

தெலுங்கில் 2006இல் போட்டோ எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தமிழில் இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007இல் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமானார். இந்தப் படமும் அங்காடி தெரு படமும் அஞ்சலிக்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது. பின்னர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பலவற்றிலும் நடித்தார். 

இதையும் படிக்க:  ஓடிடி எனும் புரட்சி வருவதை நான் முன்பே கணித்தேன்: கமல்ஹாசன் 

தமிழில் எங்கேயும் எப்போதும், சிங்கம், வத்திகுச்சி போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழில் கடைசியாக 2020இல் பாவ கதைகள் எனும்  படத்தில் நடித்திருந்தார். நவரசா, ஜான்சி, ஃபால் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார். 

ADVERTISEMENT

தெலுங்கில் நிதின் உடன் மச்செர்லா நியோஜகவர்கம் படத்தில் ரா ரா ரெட்டி பாடலுக்கு சமந்தா போல குத்தாட்டம் ஆடியிருந்தார். இந்தப் பாடல் மிகுந்த வரவேற்பினை பெற்றது.

இதையும் படிக்க:  நம்ம தாசில்தார் சத்யாவா இது?: வாணி போஜனின் சுற்றுலா புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்!

மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜுடன் நடித்த ‘இரட்ட’ திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. தெலுங்கில் ராம் சரணுடன் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். 

மீண்டும் இயக்குநர் ராமின் இயக்கத்தில் நிவின் பாலியுடன் இணைந்து ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அஞ்சலியின் 50வது படமாக ‘ஈகை’ எனும் படம் உருவாகி வருகிறது. கிரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தினை அசோக் வேலாயுதம் இயக்குகிறார். 

நேற்று முதல் தோற்றப் படம் வெளியான நிலையில் இன்று அயலி படத்தில் நடித்து பிரபலமான அபி நக்‌ஷத்ரா இருக்கும் இரண்டாவது தோற்றப் படம் வெளியாகியுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT