செய்திகள்

நம்ம தாசில்தார் சத்யாவா இது?: வாணி போஜனின் சுற்றுலா புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்!

28th May 2023 03:04 PM

ADVERTISEMENT

 

ஊட்டியில் பிறந்த வாணி போஜன் தனியார் தொலைக்காட்சியில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக தெய்வமகள் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்தப் படத்தில் சத்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் 2019இல் தெலுங்கில் மீக்கு மாத்திரமே செப்தா எனும் படத்தில் அறிமுகமானார். 2022இல் தமிழில் ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

இதையும் படிக்க: ஓடிடி எனும் புரட்சி வருவதை நான் முன்பே கணித்தேன்: கமல்ஹாசன் 

ADVERTISEMENT

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மலேசியா டூ அம்னீசியா, மிரள், லவ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், கேஸினோ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். 

இதையும் படிக்க: டோவினோ தாமஸை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்! 

மகான் படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தார். ஆனால் எடிட்டிங்கில் அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. ட்ரிபிள்ஸ், தமிழ்ராக்கர்ஸ், செங்களம் ஆகிய இணையத் தொடர்களில் நடித்துள்ளார். 

தற்போது இந்தோனிஷியாவில் சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். புடவையில் ரசிகர்கள் மனதை கவர்ந்த வாணி போஜனின் இந்த புதிய புகைப்படத்திற்கு, ரசிகர்கள் "க்யூட்டாக இருக்கிறது” எனவும் “நம்ம தாசில்தார் சத்யாவா இது”வெனவும் ஆச்சர்யமாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT