செய்திகள்

மலையாளத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராய்? 

27th May 2023 03:06 PM

ADVERTISEMENT

 

1997இல் இருவர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். பின்னர் ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன் படங்களில் நடித்துள்ளார். பின்னர் ஹிந்திப் படங்களில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் சினிமா ரசிகர்களிடையே பேசுபொருளானார். பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. 

இதையும் படிக்க: வரலட்சுமி சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா: காரணம் என்ன தெரியுமா?

மலையாளத்தில் முதல்முறையாக திலிப்பின் 148வது படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல புகைப்பட கலைஞர் ஷாலு என்பவர் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் திலீப்பின் 148வது படத்தில் ஐஸ்வர்யாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினால் சமூக வலைதளங்களில் இதுகுறித்து பேச்சு பரவியுள்ளது. 

ADVERTISEMENT

 

படக்குழு சார்பாக இதுவரை அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அறிமுக இயக்குநர் ரதீஷ் ரகுநந்தனின் ‘உடல்’ திரைப்படம் (2022) நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது நடிகர் திலீப்பின் 148வது படத்தினை இவர்தான் இயக்கி வருகிறார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் இஃபார் மீடியா இணைந்து தயாரிக்கிறார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT