செய்திகள்

இளம்பெண்ணை 2வது திருமணம் செய்த 60 வயது கில்லி பட நடிகர்

26th May 2023 03:15 PM

ADVERTISEMENT


கில்லி படத்தில், நடிகர் விஜய்க்கு தந்தையாகவும், மிகவும் கண்டிப்பான காவல்துறை அதிகாரியாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் முக்கிய இடம் பிடித்த நடிகர் ஆசிஷ் வித்தியார்த்தி தனது 60வது வயதில், இளம் பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

ஆசிஷ் வித்தியார்த்தி, அஸ்ஸாமைச் சேர்ந்த ஆடைவடிவமைப்பாளர் ரூபாலி பரூவாவை கொல்கத்தாவில் கரம்பிடித்துள்ளார்.

அவர்களது புகைப்படங்கள் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும், திருமண ஜோடிகள் நடனமாடும் புகைப்படங்களும் வேகமாகப் பரவி வருகிறது.

நாங்கள் இருவரும் சில காலத்துக்கு முன்பு நட்பாகப் பழகினோம். பிறகு ஒன்றாக சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்தோம். ஒரு சிறிய குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் திருமணம் செய்துகொண்டோம் என்று ஆசிஷ் வித்யார்த்தி தெரிவித்துள்ளார்.
photo : bollywoodcouch

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT