செய்திகள்

விடாமுயற்சி படத்தின் கதாநாயகி இவரா?

24th May 2023 04:18 PM

ADVERTISEMENT

விடாமுயற்சி படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்திற்காக கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. 

அதன்படி, அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைத்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 

ADVERTISEMENT

மேலும், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஐஸ்வர்யா ராஜ், த்ரிஷா, கரீனா கபூர், கங்கனா ரணாவத் உள்ளிட்ட நடிகைகளுடன் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், இப்படத்தில் திரிஷா  கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் கமல்!

கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களை தொடர்ந்து, விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT