செய்திகள்

தனுஷ் - 50 படத்தில் இணையும் பிரபலங்கள்!

24th May 2023 11:41 AM

ADVERTISEMENT

நடிகர் தனுஷின் 50-வது படத்தில் பிரபல நடிகர்கள் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷே இயக்கவுள்ளார். சில நாள்களுக்கு முன்பு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சுதிப் கிஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால், காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், வடசென்னையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Dhanush 50
ADVERTISEMENT
ADVERTISEMENT