செய்திகள்

அடியே படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

24th May 2023 06:35 PM

ADVERTISEMENT

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் அடியே படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டம் இரண்டு படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் அடியே. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக கெளரி கிஷன் நடித்திருக்கிறார். 

மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இதையும் படிக்க: விடாமுயற்சி படத்தின் கதாநாயகி இவரா?

ADVERTISEMENT

அடியே படத்தின் முதல் பாடலான 'வா செந்தாழினி' பாடல் வரும் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT