செய்திகள்

லியோ: விஜய்க்கு அப்பாவாக சஞ்சய் தத்?

19th May 2023 01:20 PM

ADVERTISEMENT


லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு, நடிகர் சஞ்சய் தத் அப்பாவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன்  ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தொடர்ந்து, ஹைதராபாத்தில் இறுதிகட்ட படப்பிடிப்புக்கு பிறகு அக்டோபர் 19-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் கதை திரைக்கு வரும் வரை ரகசியம் காக்கப்படுவது வழக்கம். இதேபோல், லியோ படத்தின் கதையையும் மிக ரகசியமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளார். லியோ படம் எல்சியூ-வில் வருமா என்ற தகவலைகூட இதுவரை கசியவிடவில்லை.

ADVERTISEMENT

இதையும் படிக்க: ரூ.10 கோடி கூட வசூலிக்காத கஸ்டடி!

இந்நிலையில், லியோவில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாகவும் இவர்கள் தொடர்பான சண்டைக்காட்சிகள் மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT