செய்திகள்

வெளியானது கிறிஸ்டோபர் நோலனின் புதிய பட டிரைலர்!  

8th May 2023 06:11 PM

ADVERTISEMENT


‘தி டார்க் நைட்’ படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் 52 வயதான ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். இந்தப் படத்தில் வரும் ‘ஜோக்கர்’ கதாபாத்திரம் மிகவும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழில்கூட ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 

பேட் மேன், தி டார்க் நைட்,  இண்டர்ஸ்டெல்லர் போன்ற படங்களை இயக்கிய நோலனின் டெனன்ட் திரைப்படம் 2020இல் வெளியாகி நல்ல கவனம் ஈர்த்தது. அவரது கதைகள் ரசிகர்களை குழப்பும் அளவுக்கு திரைக்கதையை  அமைக்கக்கூடியவர். இயற்பியல் விதிகள் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். கணிதம், இயற்பியல், வரலாறு என கலந்து சுவாரசியமாக படமெடுப்பவர் நோலன். 

தற்போது 3 வருடங்களுக்குப் பிறகு ‘ஓபன்ஹெய்மர்’ என்ற படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் 3 நிமிட புதிய டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரபல இணையத்தொடரான பீக்கி பிளைண்டர்ஸின் கதாநாயகன் சிலியன் மர்ஃபி நடித்துள்ளார். 

அமெரிக்காவில் அணுகுண்டின் தந்தை எனப்படுவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து  இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் நோலனின் ரசிகர்கள் இந்தப் படத்திற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT