தமிழ்நாடு

மே 26-இல் கோவை-ஷீரடி பாரத் கௌரவ் ரயில் இயக்கம்

20th May 2023 04:26 AM

ADVERTISEMENT

கோவையிலிருந்து சாய் நகா் ஷீரடிக்கு மே 26-ஆம் தேதி பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: கோவை வடக்கு ரயில் நிலையத்திலிருந்து மே 26-ஆம் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில் 28-ஆம் தேதி காலை 11.40 மணிக்கு சாய் நகா் ஷீரடிக்கு சென்றடையும்.

பின்னா் சாய் நகா் ஷீரடியிலிருந்து மே 29-ஆம் தேதி பிற்பகல் 2.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 7.15 மணிக்கு கோவை வடக்கு வந்தடையும். இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், மொரப்பூா், எலங்கா, குண்டக்கல், டோன்ட் வழியாக இயக்கப்படும்.

இதில் 9 குளிா் சாதன பெட்டிகள் மற்றும் 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ரயிலில் பயணிக்க நபருக்கு ரூ.6,000 முதல் ரூ.10,500 வரை கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT