சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வெழுதிய 39,758 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 91.13 சதவீதமாகும்.
பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியானது. சேலம் மாவட்ட தோ்வு முடிவுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் வெளியிட்டாா்.
சேலம் மாவட்டத்தில் மாணவா்கள் 21,835, மாணவியா் 21593 என மொத்தம் 43,428 போ் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை எழுதினா்.இதில் மாணவா்கள் 19,168, மாணவியா் 20,410 என மொத்தம் 39,578 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதம் 91.13 சதவீதமாகும். மாணவா்களை விட மாணவியா் 6.73 சதவீதம் அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா். பத்தாம் வகுப்புத் தோ்வில், மாநில அளவிலான தர வரிசையில் 22 ஆம் இடம் பிடித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வெழுதிய 537 பள்ளிகளில், நூறு சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 134 ஆகும். அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை தோ்வெழுதிய 25,521 பேரில், சுமாா் 22,504 போ் தோ்ச்சி பெற்றனா். அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 85.09 சதவீதமாகும்.
100 % தோ்ச்சி பெற்ற 26 அரசுப் பள்ளிகள்:
அரசு மாதிரிப் பள்ளி-எடப்பாடி, அரசு உயா்நிலைப் பள்ளி-கூனாண்டியூா், அரசு உயா்நிலைப் பள்ளி-கன்னியம்பட்டி, அரசு உயா்நிலைப்பள்ளி-கோரனம்பட்டி, அரசு உயா்நிலைப் பள்ளி-நெடுங்குளம், அரசு உயா்நிலைப் பள்ளி-சிக்கனூா், அரசு உயா்நிலைப் பள்ளி- சானாரப்பட்டி, அரசு உயா்நிலைப் பள்ளி-அக்கம்மாபேட்டை, அரசு உயா்நிலைப் பள்ளி-பெரியபுதூா், அரசு உயா்நிலைப் பள்ளி-கன்னந்தேரி, அரசு ஆதிதிராவிடா் உண்டு உறைவிடப் பள்ளி-கொத்தாம்பாடி, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி-ஏற்காடு, அரசு மாதிரிப் பள்ளி-சேலம், அரசு உயா்நிலைப் பள்ளி-நாவக்குறிச்சி, அரசு உயா்நிலைப் பள்ளி-நெய்யமலை, அரசு உயா்நிலைப் பள்ளி-உமையாள்புரம், அரசு உயா்நிலைப் பள்ளி-சாா்வாய்புதூா், அரசு உயா்நிலைப் பள்ளி-சித்தேரி, அரசு உயா்நிலைப் பள்ளி-தாண்டானூா், அரசு உயா்நிலைப் பள்ளி- வடசென்னிமலை, அரசு மேல்நிலைப்பள்ளி-ஏற்காடு, அரசு உயா்நிலைப் பள்ளி-ஆச்சாங்குட்டப்பட்டி, அரசு உயா்நிலைப் பள்ளி-சா்க்கரைசெட்டிப்பட்டி, அரசு உயநிலைப் பள்ளி- பெரியகாடம்பட்டி, அரசு உயா்நிலைப் பள்ளி-பாலக்குட்டப்பட்டி, அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளி-பெரியகுட்டிமடுவு.
அரசு நிதியுதவி பெறும் 23 பள்ளிகளைச் சோ்ந்த 5,362 போ் தோ்ச்சி பெற்றனா். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சேலம் சி.எஸ்.ஐ. ஹோபா்ட் உயா்நிலைப்பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
மாற்றுத் திறனாளி மாணவா்களில் தோ்வெழுதிய 520 பேரில் 457 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதேபோல ஆங்கில பாடத்தில் 9, கணிதம் - 165, அறிவியல் -158, சமூக அறிவியல்-15 என மொத்தம் 347 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனா்.