போர் தொழில் திரைப்படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம். எஸ்டேட் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்களிடம் ஆதரவைப் பெற்றதால் அதிக திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: பாராட்டுவதா? பயப்படுவதா? அச்சுறுத்தும் தொழில்நுட்பம்!
இந்நிலையில், இன்று இப்படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தில் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய படத்தை வெளியிட்ட சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலன், உலகளவில் இப்படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரூ.5.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து 2023 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் வரிசையில் இடம்பெற்று அசத்தியுள்ளது.
இதில் காவலதிகாரிகளாக அசோக் செல்வன், சரத் குமார் நடித்துள்ளனர். நிகிலா விமலும் சிறப்பாக நடித்துள்ளார். விக்னேஷ் ராஜா, ஆல்பிரட் பிரகாஷ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள்.