செய்திகள்

50 நாள்களை நிறைவு செய்த குட் நைட்!

30th Jun 2023 03:08 PM

ADVERTISEMENT

 

குட் நைட் திரைப்படம் திரையரங்குகளில் 50 நாள்களை நிறைவு செய்துள்ளது.

அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கிய 'குட் நைட்' படத்தில் 'ஜெய் பீம்' பட பிரபலம் மணிகண்டன் கதாநாயகனாக நடித்திருந்தார். 'முதல் நீ முடியும் நீ' பிரபலம் மேத்தி ரகுநாத் கதாநாயகியாகவும் ரமேஷ் திலக், பகவதி பெருமாள் என்ற பக்ஸ், பாலாஜி சக்திவேல் மற்றும் ரேச்சல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: பாராட்டுவதா? பயப்படுவதா?  அச்சுறுத்தும் தொழில்நுட்பம்!

ADVERTISEMENT

குறட்டைப் பிரச்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு திரைக்கு வந்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்நிலையில், இப்படம் சில திரையரங்களில் தன் 50-வது நாளை நிறைவு செய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT