செய்திகள்

சிகிச்சை முடிந்து தேறி வருகிறேன்: பிருத்விராஜ்

28th Jun 2023 12:09 PM

ADVERTISEMENT

 

படப்பிடிப்பின்போது பலத்த காயமடைந்த நடிகர் பிருத்விராஜ் தன் உடல்நலம் குறித்து தெரிவித்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்து உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் பிருத்விராஜ். மேலும், தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் வலம்வருகிறார்.

தற்போது ஜெயன் நம்பியார் இயக்கி வரும் ‘விளையாத் புத்தா’ என்ற மலையாள படத்தில் பிருத்விராஜ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மறையூரில் நடைபெற்று வருகின்றது.

ADVERTISEMENT

இந்நிலையில், பிருத்விராஜ் நடிக்கும் சண்டைக்காட்சி நேற்று முன்தினம் படமாக்கப்பட்ட நிலையில், திடீரென கீழே விழுந்ததில் பிருத்விராஜின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது

இதையும் படிக்க | நா ரெடி பாடலில் புகைப்பிடித்தல் எச்சரிக்கை வாசகம் இணைப்பு!

இதனைத் தொடர்ந்து, முதலுதவி அளிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிருத்விராஜ் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக இருப்பதாகவும் சில மாதங்கள் ஓய்வு தேவைப்படும் என்று கூறியதோடு தனக்காக அக்கறை செலுத்திய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Tags : Prithviraj
ADVERTISEMENT
ADVERTISEMENT