செய்திகள்

குடும்பத்திற்கு வரவேற்கிறேன் அண்ணி: லாவண்யாவை வரவேற்ற வருண் தேஜின் தங்கை! 

10th Jun 2023 02:25 PM

ADVERTISEMENT

 

தெலுங்கில் 2014இல் முகுந்தா படத்தின் மூலம் அறிமுகமானவர் வருண் தேஜ். நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகனும் ஆவார் வருண் தேஜ். தெலுங்கில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். சாய் பல்லவியுடன் நடித்த பிடா திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. 

இதையும் படிக்க: லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன்? 

ADVERTISEMENT

இதையும் படிக்க: நடிகர் பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான புதிய பட டீசர்! 

தமிழில் பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா த்ரிப்பாதி. தெலுங்கில் வருண் தேஜுடன் இணைந்து 4 படங்களை நடித்துள்ளார். 2017இல் மிஸ்டர் படத்தில் நடித்தபோதே இருவருக்கு  காதல் பூத்ததாக தகவல்கள் கசிந்தது. இருப்பினும் இருவரு எதுவும் கூறாமல் தற்போது நிச்சய்தார்த்திற்குப் பிறகு தங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்ததில் வருணின் பெரியப்பாவும் நடிகருமான சிரஞ்சீவி குடும்பத்தினரும் சித்தப்பாவும் நடிகருமான பவன் கல்யாண், சகோதரர் ராம் சரண் குடும்பத்தினரும், அல்லு அர்ஜுன் குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர். 

இன்ஸ்டாகிராமில் நடிகர் வருண் தேஜ், ”காதலை கண்டுபிடித்தேன்” என பதிவிட்டுள்ளார். நடிகை லாவண்யா, “2016 முதல் முடிவிலிவரை... எனது எப்போதுமானவரை கண்டு பிடித்தேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

 

இந்நிலையில் நடிகையும் தயாரிப்பாளருமான வருண் தேஜின் தங்கை நிஹாரிகா கொனிடேலா, “இந்த நாளுக்காக காத்திருந்தேன். எங்களது குடும்பத்திற்கு வரவேற்கிறேன் அண்ணி” என பதிவிட்டுள்ளார். 

நடிகை சமந்தா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT