செய்திகள்

ரன்பீரின் அனிமல் திரைப்படத்தின் புதிய அப்டேட்!

10th Jun 2023 04:34 PM

ADVERTISEMENT

 

2017ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இதில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது. தமிழில் துருவ் விக்ரம் இந்தப் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க:  அதிகரிக்கும் காட்சிகள்: ரசிகர்கள் பாராட்டு மழையில் போர் தொழில் திரைப்படம்!

ADVERTISEMENT

இந்த இயக்குநரின் புதிய படம் பற்றி அறிவிப்பு ஜனவரியில் வெளியாகியது. இதில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். படத்தின் பெயர் ‘அனிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. கொடூரமான விலங்கு போல ரன்பீர் ரத்தம் வடிய கையில் சுத்தியலுடன் சிகரெட் பிடிக்கும் முதல் பார்வை போஸ்டர் ஜனவரியில் வெளியாகியது.   

இதையும் படிக்க: லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன்? 

இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளதாக தெரிகிறது. இயக்குநரின் சொந்த தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு - அமித் ராய். சுப்ரீம் சுந்தர் சண்டைப் பயிற்சியளிக்கிறார். 

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் திரையிக்கு வர உள்ளது. 

இந்நிலையில் படத்தின் டீசர் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT