செய்திகள்

நடிகர் பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான புதிய பட டீசர்! 

10th Jun 2023 12:51 PM

ADVERTISEMENT

 

நந்தமூரி பாலகிருஷ்ணா என்னும் பாலகிருஷ்ணா புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட நடிகராவர். இவர் ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 'தாத்தம்மா கலா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் என். டி. ராமராவ் - பசவ தரகம் தம்பதியினருக்கு மகனாக சென்னையில் பிறந்தார். அப்போது தெலுங்கு திரையுலகமும் பெரும்பாலும் சென்னையிலேயே இயங்கிவந்தது. அதனால் பாலகிருஷ்ணாவின் குழந்தைப்பருவம் சென்னையிலேயே கழிந்தது.

இதையும் படிக்க: லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன்? 

ADVERTISEMENT

அதன் பின் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா பிரிவினையின் போது பாலகிருஷ்ணாவின் குடும்பம் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்தது. இளங்கலை வணிகவியல் படிப்பை ஐதராபாத்தில் உள்ள நிசாம் கல்லூரியில் பாலகிருஷ்ணா முடித்தார். 1982ல் வசுந்திரா தேவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். 

கடைசியாக வெளியான இவரது படம் வீர சிம்ஹா ரெட்டி. இந்தப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழில் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இன்று பாலகிருஷ்ணா பிறந்தநாளை முன்னிட்டு பகவந்த் கேசரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் இவரது 108வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அனில் ரவிபுடி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரீ லீலா நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT