செய்திகள்

மாவீரன் படத்தின் புதிய அப்டேட்!

9th Jun 2023 05:25 PM

ADVERTISEMENT

 

மாவீரன் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள்.  இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.

மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: ராஜன் வகையறா தயார்: சந்தோஷ் நாராயணன்

மாவீரன் திரைப்படம், ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT