செய்திகள்

பதிவுகளை அழித்து இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய கஜோல்!

9th Jun 2023 02:17 PM

ADVERTISEMENT

 

பிரபல பாலிவுட் நடிகை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளையும் அழித்து அதிலிருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக, 'தில்வாலே துல்ஹனியா லே ஜெயங்கே' திரைப்படம் இந்தியாவிலேயே அதிக நாள் திரையிடப்பட்ட(1000 வாரங்கள்) படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

தமிழில் நடிகர் பிரபு தேவா நடித்த ’மின்சார கனவு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பின், நடிகர் அஜய் தேவ்கனை மணந்து பாலிவுட் படங்களில் முழு கவனத்தைக் கொடுத்தார். இறுதியாக, தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி - 2 படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிக்க: குஷி சம்பளத்தில் எஸ்.ஜே.சூர்யா செய்த செயல்.. பிரபல நடிகர் நெகிழ்ச்சி

இந்நிலையில், இன்று திடீரென இன்ஸ்டாகிராமில் நுழைந்த கஜோல், ’என் வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன்’ எனப் பதிவிட்டதுடன் தன் பழைய பதிவுகள் அனைத்தையும் அழித்து இன்ஸ்டாவிலிருந்து வெளியேறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Tags : Kajol
ADVERTISEMENT
ADVERTISEMENT