செய்திகள்

தங்கலான் படப்பிடிப்பிற்கு தயாரான விக்ரம்!

8th Jun 2023 12:42 PM

ADVERTISEMENT

 

நடிகர் விக்ரம் தங்கலான் படப்பிடிப்பிற்கு தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: விஜய் - வெங்கட் பிரபு  படத்தில் ஜோதிகா?

விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட படத்தின் பிரத்யேக மேக்கிங் விடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே, படப்பிடிப்புக்கான ஒத்திகையின்போது விபத்தில் சிக்கிய விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததால், சிறிது காலம் ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில், விக்ரம் காயத்திலிருந்து மீண்டுள்ளதாகவும் படப்பிடிப்பு வருகிற ஜூன் 15 ஆம் தேதி மீண்டும் தொடங்கி, 12 நாள்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT