செய்திகள்

அடுத்தவங்க எப்படி வாழணும்னுதான் கவலை: சமந்தா

8th Jun 2023 06:00 PM

ADVERTISEMENT

 

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில்  கருத்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு தற்போது அதிலிருந்து மீண்டுள்ளார்.

யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடைபெற்று வருகின்றது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: இயக்குநர் கோபி நயினார் மீது மோசடி புகார்

கடந்த வாரம் விஜய் தேவரகொண்டாவுடன் உணவகத்தில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு வைரலானார்.

இந்நிலையில், சமந்தா தன் இன்ஸ்டா பக்கத்தில் பிரபல எழுத்தாளர் பாவ்லோ கொய்லோவின் ’எல்லோருக்கும் அடுத்தவர் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்த யோசனை உள்ளது. ஆனால், யாருக்கும் அவரவர் வாழ்க்கையைப் பற்றிய எண்ணமில்லை’ என்கிற கருத்தைப் பகிர்ந்துள்ளார். 

Tags : samantha
ADVERTISEMENT
ADVERTISEMENT