செய்திகள்

ஆதிபுருஷ்க்கு 10,000 டிக்கெட்கள் இலவசம்... காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிப்பாளர்!

8th Jun 2023 04:41 PM

ADVERTISEMENT

 

ஆதிபுருஷ் படத்தைக் காண 10,000 டிக்கெட்களை இலவசமாக வழங்குவதாக காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம்  ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ்.

ADVERTISEMENT

ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதையும் படிக்க | சூப்பர் ஸ்டார் தந்த பரிசு.. தமன்னா நெகிழ்ச்சி!

இந்நிலையில், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், ‘வாழ்நாளில் ஒருமுறையாவது அனைவரும் கொண்டாட வேண்டிய திரைப்படம் ஆதிபுருஷ் . ஸ்ரீ ராமர் மீதான எனது பக்தியின் காரணமாக தெலுங்கானா முழுவதும் அரசுப் பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT