செய்திகள்

கவர்ச்சி.. படுக்கையறைக் காட்சிகள்.. லஸ்ட் ஸ்டோரீஸில் தமன்னாவின் சம்பளம் இவ்வளவா?

7th Jun 2023 05:32 PM

ADVERTISEMENT

 

லஸ்ட் ஸ்டோரீஸ் - 2 தொடருக்கு நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

முன்னணி நாயகியாக இருந்தாலும் அவருக்குப் பின்  நடிக்க வந்த சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் இடத்தை தமன்னாவால் பிடிக்க முடியவில்லை. 15 ஆண்டுகளாக சினிமாவிலிருப்பவர் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: யாஷிகாவுடன் காதலா? ரிச்சர்ட் ரிஷி விளக்கம்

இவர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாக உள்ள ‘லஸ்ட் ஸ்டோரீஸ் - 2’ தொடரின் டீசர் நேற்று வெளியானது. இதில், தமன்னா இடம்பெற்றுள்ள காட்சிகள் பயங்கர கவர்ச்சியாக இருந்ததால் அவர் டிரெண்ட் ஆகியுள்ளார். 

இந்நிலையில், இத்தொடரில் நடிக்க தமன்னா ரூ.4 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும்  குறைந்த நேரமே நடித்திருந்தாலும் கவர்ச்சி மற்றும் படுக்கையறை காட்சிகள் நிறைய இருந்ததால் அதிக சம்பளம் கேட்டதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT