செய்திகள்

யாஷிகாவுடன் காதலா? ரிச்சர்ட் ரிஷி விளக்கம்

7th Jun 2023 04:47 PM

ADVERTISEMENT

 

சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் குறித்து நடிகர் ரிச்சர்ட் ரிஷி விளக்கமளித்துள்ளார்.

திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரிச்சர்ட் ரிஷி. இவர் நடிகர் அஜித்குமாரின் மைத்துனர் ஆவார். 

ரிச்சர்ட் மீண்டும் இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் புதிய படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். 

ADVERTISEMENT

இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ரிச்சர்ட் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நாள்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். இதைக்கண்ட ரசிகர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என பின்னூட்டமிட்டதுடன் இப்படங்களை வைரலாக்கினர்.

இதையும் படிக்க: கங்கனா ரணாவத் படத்தை நான் இயக்கவில்லை: அயோத்தி இயக்குநர்

இதுகுறித்து ரிச்சர்ட், ‘இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகிறோம். அதற்கான புரோமோஷனாக எங்கள் படங்களை வெளியிட்டோம். எனக்கும் யாஷிகாவுக்கும் வேறு எந்த உறவும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார். 

ரிச்சர்ட் வெளியிட்ட படங்களில் யாஷிகா அவருக்கு முத்தம் கொடுக்கும் படமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT