ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
என்றென்றும் புன்னகையின் இயக்குநர் ஐ. அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது.
இதையும் படிக்க | கவர்ச்சி.. படுக்கையறைக் காட்சிகள்.. லஸ்ட் ஸ்டோரீஸில் தமன்னாவின் சம்பளம் இவ்வளவா?
இந்நிலையில், இப்படம் வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.