செய்திகள்

விஜய் - வெங்கட் பிரபு படத்தின் தலைப்பு இதுதானா?

DIN

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்குப் பிறகு, விஜய்யை இயக்குவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. 

பின், விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில், இப்படத்திற்கு ‘சிஎஸ்கே’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் மூலம் விஜய்யுடன் வெங்கட்பிரபு முதன்முறையாகவும், அதேசமயம் யுவன்சங்கர்ராஜா இரண்டாவது முறையாகவும் கூட்டணி அமைக்க உள்ளனர். முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசைமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT