செய்திகள்

சாதனையை முறியடித்த 2018: வசூல் இவ்வளவா?

6th Jun 2023 02:32 PM

ADVERTISEMENT

 

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவான 2018 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது.

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது.

இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லன் இவரா?

கேரளத்தில் மே 5 ஆம் தேதி வெளியான இப்படம் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலைக் கடந்த முதல் மலையாளப் படம் என்கிற பெருமையைப் பெற்றிருந்தது. 

இந்நிலையில், தற்போது உலகளவில் இப்படம் ரூ.160 கோடியை வசூலித்துள்ளதாகவும் கேரளத்தில் மட்டும் ரூ.85 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், கேரளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் திரைப்படம் ரூ.84 கோடி வசூலித்திருந்ததே சாதனையாகக் கருத்தப்பட்டு வந்தநிலையில், 7 ஆண்டுகளுக்குப் பின் 2018 திரைப்படம் அச்சாதனையை முறியடித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT