செய்திகள்

வெளியானது ரெஜினா டிரைலர்

6th Jun 2023 12:19 PM

ADVERTISEMENT

 

நடிகை சுனைனா நடிப்பில் உருவான ரெஜினா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். 

தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: விஜய் - வெங்கட் பிரபு படத்தின் தலைப்பு இதுதானா?

இந்நிலையில்,  கதை நாயகியாக சுனைனா நடிப்பில் உருவான ‘ரெஜினா’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்துள்ளார். இதில் நிவாஸ் ஆதித்தன், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

சதிஷ் நாயர் தயாரித்துள்ள இந்தப் படத்தினை இயக்குகிறார் டோமின் டி செல்வா. யுகபராதி எழுதிய ‘சூராவளிப் போல’ எனும் இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். தயாரிப்பாளரான சதிஷ் நாயர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியப் படமாக ரிலீஸாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT